ஹபரணை-பொலன்னறுவை பிரதான விதியில் மின்னேரிய மினிஹிரிகம பகுதியில் இன்று (01) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்த்துடன் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்புக்கும் கதுருவெலவுக்கும் இடையில் பயணித்த இரண்டு தனியார் பஸ்களே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் ஹிங்குராக்கொட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.