அரசியல்உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் இன்று (01) முதல் அமலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 வருடங்கள் பணியாற்றியுள்ளதோடு, அவரது பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாகவும் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

பிரதமர் – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு ஆரம்பம்

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி