உள்நாடு

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய்கள் தற்போது 220 முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதங்களில் தேசிய தேங்காய் அறுவடை 500 மில்லியனைத் தாண்டும் என்றும் தென்னை ஆராய்ச்சி நிலையம் கணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்

Related posts

CID அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஒரு கோடி ரூபாய் இலஞ்சமாக பெற்ற 4 பேர் கைது!

மூதூரில் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமைதிப்பேரணி நாளை

editor

நான் நலமாக இருக்கிறேன் – மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து.