உள்நாடு

கொழும்பில் ரஷ்ய தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ஒரு வெளிநாட்டவர் ஒருவர் ரஷ்ய தூதரகத்துக்கு வந்து மடிக்கணினி ஒன்றைக் கொடுத்துவிட்டு உடனடியாக வெளியேறியதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு மற்றும் குருந்துவத்தை பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் உடனடியாக தூதரகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குருந்துவத்தை பொலிஸாரால் மேலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

Related posts

“அதிக வெப்பத்தில் இலங்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை”

ETI நிறுவன வைப்பாளர்களின் மனுவைப் பரிசீலிப்பதற்கான திகதி அறிவிப்பு

வாழைச்சேனை, கருவாக்கேணியில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு

editor