அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட நான்கு பேரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹர நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொடையில் அமைந்துள்ள காணி வழக்கு தொடர்பாக அவர்கள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்னும் கைது செய்யப்படவில்லை.

அதன்படி, முன்னாள் அமைச்சரை கைது செய்து எதிர்வரும் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மஹர நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

திங்களன்று கடவுச்சீட்டு விநியோகம் வழமைபோல் நடைபெறும்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

editor

தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பூநகரி தபாலகம்!