உள்நாடு

தெற்கு அதிவேக வீதியில் லொறி விபத்து – கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக வீதியில் கொழும்பிலிருந்து தொடங்கொடை நோக்கி பயணித்த பருப்பு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, 17 ஆம் கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் பின்புற சக்கரம் பிரிந்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், லொறி கவிழ்ந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போதுஅதிவேக வீதி பொலிஸார் வாகன நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தடயவியல் தணிக்கை அறிக்கையை பா.உ வழங்க முடியாது [VIDEO]

சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லவல நீர்வீழ்ச்சி தடை

அட்டுளுகம சிறுமி கொலை : CID விசாரணைகள் ஆரம்பம்