உலகம்

உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியல் வெளியீடு

டைம் ஆங்கிலப் பத்திரிகை 2025-ஆம் ஆண்டின், உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அரசியல், அறிவியல், வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிட்ட தாக்கத்தையும், பங்களிப்பையும் ஏற்படுத்தியுள்ள பல்வேறு பிரமுகர்கள் இடம்பெறுவார்கள்.

இம்முறை இப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க், பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேவேளை இந்தப் பட்டியலில், இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசியாவின் மிகவும் வயதான யானை உயிரிழந்தது

editor

ஜப்பானை சுழற்றும் ‘லூபிட்’

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்த வடகொரியா முடிவு