உள்நாடுபிராந்தியம்

முச்சக்கர வண்டி, பேருந்துடன் மோதி கோர விபத்து – ஆறு பேர் படுகாயம்

ஹட்டன்-மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று தனியார் பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஆபத்தான நிலையில் இந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (16) இரவு நடந்துள்ளதுடன், ஹட்டனில் இருந்து ஹட்டன் லெதண்டி தோட்டத்திற்கு பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

13 வயது மாணவன் உட்பட அவரது நான்கு நண்பர்களை ஏற்றிக்கொண்டு, அதிவேகமாக முச்சக்கர வண்டியை சாரதி செலுத்திய போது, எதிர் திசையில் மஸ்கெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

டுபாயில் இருந்து செயற்படும் ‘மினுவாங்கொட மகேஷ் மல்லி’ இன் கூட்டாளிகளிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓமானிலிருந்து நாடு திரும்பிய 288 இலங்கையர்கள்

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி