உள்நாடுபிராந்தியம்

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொபெயிகனே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொபெயிகனே பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (16) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதுடைய குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொபெயிகனே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மூன்று விவசாயிகளின் உயிரினை பறித்த மின்னல்

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு

பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

editor