உள்நாடு

கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா நகரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொரி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு இன்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் சிறிய லொரியில் பயணித்த 2 பேர் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்கு ஓடியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் லொரிக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வாக்களிப்பு நிலையத்தில் படம், காணொளி எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை

editor

இலங்கை கிரிக்கெட் அணியில் மூவருக்கு கொரோனா

கொரோனாவிலிருந்து இதுவரை 1967 பேர் குணமடைந்தனர்