உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனபல்லம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஆனபல்லம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த முதியவரை பலமாக தாக்கியுள்ளது.

காயமடைந்த முதியவர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனபல்லம பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதியவரை தாக்கிய காட்டு யானை வெல்லவாய – மொனராகலை வீதியில் சிறிது நேரம் சுற்றித்திரிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

இரண்டாவது நாளாகவும் தொடரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள்

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

மஹிந்த இன்று SLPP உறுப்பினர்களை சந்திக்கிறார்