உலகம்

புதிய வரிக் கொள்கையை 90 நாட்களுக்கு நிறுத்திய அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி அறிவித்த புதிய வரி கட்டண விகிதங்களை அமுல்படுத்துவது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சீனா மீதான வரி 125 சத வீதமாகவே உள்ளது.

சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 104% வரி விதித்ததால் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகள் மீது 84% வரி விதித்து பதிலடி கொடுத்தது.

அமெரிக்கா மீண்டும் வரிகளை உயர்த்துவதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே வரிகளை கணிசமாக உயர்த்துவதும் பின்னர் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்து தனிப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும்தான் திட்டம் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

75க்கும் மேற்பட்ட நாடுகள் எங்களுடன் இணைந்துள்ளன. இன்னும் பல நாடுகள் எம்முடன் இணையும் என்று நான் நம்புகிறேன்,” என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறினார்.

Related posts

போலிச் செய்திகளைப் பற்றி பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் YouTube

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு

ஹஜ் ஒப்பந்தம் ஜெத்தாவில் கையெழுத்தானது

editor