அரசியல்உள்நாடு

காத்தான்குடி நகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு

காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சில சுயற்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒருமித்து அறிமுக நிகழ்வும் பொதுக்கூட்டமும் காத்தான்குடி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

காத்தான்குடி நகர சபை 10 வட்டார உறுப்பினர்களையும் 9 போனஸ் உறுப்பினர்கள் அடங்கலாக 19 உறுப்பினர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வட்டி வீதத்தை குறைக்காத வர்த்தக வங்கிகள் தொடர்பில் அரசு அவதானம்!

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

கடந்த 24 மணித்தியாலத்தில் 45 பேர் கைது