அரசியல்உள்நாடு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள புதிய வரி – பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி அநுர விசேட குழு நியமிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்து, அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.

அதன்படி, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர், வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வர்த்தக சபையின் தலைமை பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரப் உமர், ஷெராட் அமலீன் மற்றும் சைஃப் ஜெப்ஜி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

போலியான குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள்

editor

தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

editor

எதிர்வரும் நோன்மதி தினமன்று விகாரைகளை இருளில் வைக்க யோசனை