உள்நாடுபிராந்தியம்

தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏக்கல பகுதியில் நேற்று (01) ஒருவர் ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பணத் தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததாகவும், இதன் விளைவாக மூத்த சகோதரர் கூர்மையான ஆயுதத்தால் தம்பியைத் தாக்கிக் கொலை செய்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் ஏக்கல, சென்ற் மத்யூ மாவத்தையைச் சேர்ந்த 24 வயது இளைஞராவார்

ஏக்கலவைச் சேர்ந்த 35 வயதுடைய அவரது சகோதரர் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

இன்னும் மூன்று நாட்களில் ‘நீண்ட வரிசைகளுக்கு’ தீர்வு

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா ? ராஜித சேனாரத்ன

editor