உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கி 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.

ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.

சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிரதீபன்

Related posts

சுழற்சி முறையின் கீழ் இன்றும் மின்வெட்டு

பெருந்தொகையான ஹெரோயினுடன் கடற்படையினரிடம் சிக்கிய மீன்பிடி படகு

கடமைகளை பொறுப்பேற்ற ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர்