உள்நாடு

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு செயல்படும் கேபிள் கார்களில் செல்லும் அரிய வாய்ப்பை இலங்கையில் அனுபவிக்கமுடியும்.

மத்திய மலைநாட்டில் கம்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள அம்புலுவாவ மலைசிகரத்தில் இருந்து அம்புலுவாவ மத மற்றும் பல்லுயிர் வளாகம் வரை 1.8 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கியதாக கேபிள் கார் திட்டம் வடிவமைக்கப்பட்டவுள்ளது.

இந்த கேபிள் கார் திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியாகும். இந்த திட்டத்தின் முதல் கட்டம் இவ் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையவுள்ளது

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக்கொலை.

Z தமிழ் ‘ஸரிகமப’ சீசன் 5 இற்கு தெரிவான அம்பாறை மாவட்ட பாடகர் சபேசன்

editor

மேலும் 29 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்