உள்நாடு

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த நபர் மீண்டும் விளக்கமறியலில்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான சந்தேக நபரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (24) அழைக்கப்பட்ட போது, சந்தேக நபரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் நாலக ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்

சந்தேக நபரை இன்று அடையாள அணிவகுப்புக்கு அழைத்து வருவதற்கு இருந்த போதிலும், சம்பவத்தை எதிர்கொண்ட பெண் வைத்தியர் அதற்கு பங்கேற்காததால் அந்த அடையாள அணிவகுப்பு நடைபெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்

சிங்கள திரைப்பட நடிகர் ரொபின் பெர்னாண்டோ காலமானார்

அனுமதி சீட்டு இன்றி வீதிகளில் பயணிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்