உள்நாடுபிராந்தியம்

லொறியுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து – தாய், மகன் படுகாயம்

நாத்தாண்டி – தங்கொட்டுவ வீதியில் தங்கொட்டுவ, மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு விளக்கமறியல்

editor

பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா இழப்பீடு

editor