உள்நாடு

கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் ஒருவர் கைது

கடந்த மார்ச் 17 ஆம் திகதி கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகலகம் வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

சம்பவம் குறித்து கிரேண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் தொலைபேசி அழைப்புகள் மூலம் குற்றம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட சந்தேக நபர், நேற்று (23) கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு, சந்தேகநபரிடமிருந்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் குற்றத்திற்கு உதவியதற்காக ஒரு பெண் உள்ளிட்ட சந்தேக நபர்கள் நான்கு போர் இதுவரையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேலதிக இடவசதி வழங்க அனுமதி

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

நானோ நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாம் தொகுதி நாட்டுக்கு