உள்நாடு

பேஸ்புக் விருந்துபசாரம் – 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது

பேஸ்புக் விருந்துபசாரம் இடம்பெற்ற இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவ பொலிஸ் பிரிவின் கிதிகொட பெல்லான வத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று (22) இரவு இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் ஐஸ் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக மூன்று பெண்களும் 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த விருந்தில் பங்கேற்றிருந்த 12 இளம் பெண்களும் 47 இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

‘அரசு அதிகாரிகளைப் பற்றி கவனமாகப் பேசுங்கள்’

ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு