உள்நாடு

பாறையிலிருந்து தவறி விழுந்த வௌிநாட்டு பெண் பலத்த காயம்

எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

சம்பவத்தில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்து நேற்று மாலை (19) செங்குத்தான பகுதியொன்றில் வைத்து இடம்பெற்றதாகவும், Flying Rawana ஊழியர்கள் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் அவர் விழுந்த பகுதியைத் தேடி கண்டறிந்து, உயிர் காக்கும் பிரிவு அதிகாரிகள் அவரை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பெண் தற்போது தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிசிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related posts

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அமைச்சரவை அனுமதி

மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

editor

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி புதிய அறிவிப்பு!