உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு லங்கா ஐ ஓ சி நிறுவனத்தினால் (Dialysis machine) அன்பளிப்பு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நீண்ட கால தேவையாக இருந்த சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் (Dialysis machine) இன்று (18) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை நிபுணர் டாக்டர் ஐ.எல்.எம். சபீக், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர், ஆகியோரின் முயற்சியினால் லங்கா ஐ ஓ சி நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மேலும், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினரினால் ஓர் இயந்திரம் கிடைக்க உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் மற்றும் லங்கா ஐ ஓ சி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனகவை நீக்க பாராளுமன்றில் பிரேரனை – சஜித் போர்க்கொடி

கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கைது

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor