உள்நாடுபிராந்தியம்

தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்ட தபால் நிலையங்கள்!

நாடளாவிய ரீதியில் தபாலக தொழிற்சங்க நடவடிக்கைகள் மூடப்பட்டமையால் இன்றைய தினம் (17) திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது தபால் நிலையம், சம்மாந்துறை தபால் நிலையம் ஆகியன தொழிற் சங்க நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் “நாங்கள் ஒரு அவசர தேவைக்காக வந்தோம் ஆனால் இன்றைய தினமும், நாளைய தினமும் நான் பணி பகிஸ்கரிப்பு என்று கூறுகிறார்கள்.

நாங்கள் இதனால் எங்களுக்கு பாரிய இழப்பாக காணப்படுகிறது. இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

குறித்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக அம்பாறை மாவட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

இன்று மாணவர்களுக்கு ZOO வை பார்வையிட இலவச அனுமதி

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

editor

ஸ்ரீ ஜயவர்த்தனபுர விபத்து பகிடிவதையா என்பது தொடர்பில் விசாரணை [VIDEO]