அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மார்ச் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவர் இன்று (17) மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களனிப் பகுதியில் ஒரு காணி தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேர்வின் சில்வா கடந்த 5ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சபாநாயகர் தலைமையிலான பாராளுமன்ற அமர்வு

தாம் பிரதமராக பதவியேற்கவுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்