உள்நாடுபிராந்தியம்

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது – 21 பேர் காயம்

நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தலம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு தமிழ் இளைஞர்கள் நியமனம்!

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் அமைதியற்ற நிலை – கலகத்தடுப்பு பொலிஸார் வரவழைப்பு

காயங்களுடன் தாக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!