உள்நாடு

பிரபல இசைக்கலைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

மீகொடை அரலிய தோட்டப் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கி ஒன்று பிரபல இசைக்கலைஞரிடம் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து பிரபல இசைக்கலைஞரின் வீட்டை சோதனையிட்ட போது துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்த சந்தேக நபரான பிரபல இசைக்கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தேசிய பூங்காக்கள் மற்றும் மிருகக்காட்சிசாலைகளை திறக்க அனுமதி

BREAKING NEWS – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

editor

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய வழக்கிலிருந்து பௌசி விடுவிப்பு