உள்நாடுபிராந்தியம்

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (13) இரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்பரலுவ வீதியின் அரலியகஸ்தெக சந்திக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உடுகம்பொல பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய நபரொருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸார் உள்ளிட்ட மூன்று விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Related posts

சஜித் பிரேமதாச வெற்றி பெற்றால் நாட்டை ஆளப் போவது அவரல்ல

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

புலிகளினால் குருக்கள் மடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிப்பு

editor