உள்நாடு

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – காமுகன் தொடர்பில் நீதவான் வழங்கிய உத்தரவு

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாரலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரின் சகோதரி கைது செய்யப்ட்ட அதே நேரத்தில் அவரது கள்ளக்காதலன் கைப்பேசி திருடிய குற்றச்சாட்டில் கடந்த தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன்படி, இருவரையும் இந்த மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 10 ஆம் திகதி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் பணி முடிந்து உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்த போது கடுமையாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று (12) கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related posts

ரிப்கான் பதியுதீனுக்கு விளக்கமறியல் [VIDEO]

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

editor

போலி டொலர்களுடன் 45 வயதுடைய நபரொருவர் கைது

editor