உள்நாடு

அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

அஞ்சல் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

அஞ்சல் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை நடத்த முடிவு செய்ததாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்த தெரிவித்தார்.

பணியாளர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல சிக்கல்கள் அஞ்சல் துறையில் உள்ளன.

இந்தப் பிரச்சினைகள் குறித்து அஞ்சல்மா அதிபருடன் கலந்துரையாடியதாகவும், இதன்போது எந்தவித சாதாரண நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறிவிட்டதாகவும், எனவே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்த தினங்களில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி

editor

கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது

பொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது