உள்நாடுபிராந்தியம்

தலையை வெளியே வைத்துக்கொண்டு ரயிலில் பயணித்த சீனப் பெண் வைத்தியசாலையில்

மலையக ரயில் மார்க்கத்தில் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (09) காலை இதல்கஸ்ஹின்ன பிங்கேய அருகில் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார்.

ஹப்புத்தளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவத்தில் 35 வயது சீனப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் ரயிலில் இருந்து தலையை வெளியே வைத்துக்கொண்டு பயணித்துள்ளதாக தெரியவருகிறது.

பெண்ணின் தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் ரயிலில் கொண்டு செல்லப்பட்டு 1990 அம்பியூலன்ஸ் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சுமார் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது.

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் 2 இலட்சம் தேங்காய்கள் விநியோகம்

editor