உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (09) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

O/L பெறுபேறுகள் வரும் திகதி அறிவிப்பு

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி கருத்து