உள்நாடு

திருகோணமலை மாவட்டத்தில் EMS தபால் விற்பனை ஊக்குவிப்பு திட்டம்

இலங்கை தபால் திணைக்களம் EMS விற்பனை ஊக்குவிப்பு திட்டத்தை திருகோணமலை பிரதேச தபால் அத்தியட்சகர் கே.எம்.எஸ் நாமல் குமாரின் தலைமையில் நேற்று 08ஆம் திகதி, சனிக்கிழமை திருகோணமலை மாவட்ட தபால் அலுவலகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.

இந்த நிகழ்ச்சியின்போது திருகோணமலை நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டு அஞ்சல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தபால் அலுவலகத்திலிருந்து நகரம் முழுவதும் நடந்து சென்று EMS சேவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கங்களை வழங்கி துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

இந்த EMS விற்பனை ஊக்குவிப்புத் திட்டம், திருகோணமலை நகரிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கானது.தபால் பொருட்களை பாதுகாப்பாக மற்றும் துரிதமாக உலகின் பல பகுதிகளுக்கும் கொண்டுசெல்வதை எளிதாக்குகிறது.

தற்போது இது இலங்கை உட்பட 48 நாடுகளில் இந்த EMS சேவைப் பொருட்களைப் பரிமாற்றுவதற்கான ஒரு முக்கிய வழியாக பயன்படுத்தப்படுகிறது.

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

காற்றின் வேகமானது அதிகரிக்கும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

editor

கிராம அலுவலர்கள் குறித்து அரசு புதிய தீர்மானம்