உள்நாடு

மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத ஜீப் வண்டி சிக்கியது

போலி ஆவணங்களை தயாரித்து ஒருங்கிணைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியொன்று தெரணியாகலை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த வாகனம் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சந்தேக நபர்கள் போலி செஸி எண்கள், என்ஜின் எண்கள் மற்றும் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ஜீப் வண்டியை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜீப் வண்டி ஏதேனும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பிரதேச குற்றவியல் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

‘போலிப் போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதே’ என்ற தொனியில் பேரணி

பெரும் தியாகங்களுடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாங்கள் அதனை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை! – திசைகாட்டி எம்பி!

editor

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 1465 ஆக உயர்ந்துள்ளது

editor