அரசியல்உள்நாடு

10 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 03ஆம் திகதி ஆரம்பமான கட்டுப்பணம் பெறும் செயல்முறையின்படி, நேற்று (06) மாலை 4.15 வரையிலான காலப்பகுதியில் 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும் 38 சுயேட்சைக் குழுக்களும் அந்த 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related posts

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .

முல்லைத்தீவில் இளைஞன் அடித்து கொலை

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் ஒரு போதும் உடன்படவில்லை – ஜனாதிபதி ரணில்.