அரசியல்உள்நாடு

மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அதிரடி தகவல்

மத்தல மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை விமான பழுதுபார்க்கும் மையமாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது கருத்து தெரிவித்த அமைச்சர், பொருத்தமான வெளிநாட்டு பங்காளியுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற அரசாங்கம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“மத்தல விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் மொத்த இழப்பு 38.5 பில்லியன் ரூபாய் ஆகும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சி போட்டி – வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்து

editor

மீனவர் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி பாராளுமன்றில் பிரேரணை கொண்டுவருகிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor

நாடளாவிய ரீதியில் நாளை முதல் அடையாளப் பணிப்புறக்கணிப்பு