உள்நாடு

சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது – பாதுகாப்பு அமைச்சு

முப்படைகளில் இருந்து சட்டரீதியாக விலகாத 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று (5) வரை பொலிஸார் மற்றும் இராணுவ பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனைகளில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, முப்படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

Related posts

வெல்லே சுரங்கவின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது

கல்முனை காரைதீவு கோட்டத்தின் கல்வி முன்னேற்ற கலந்துரையாடல்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

editor