வகைப்படுத்தப்படாத

சீரற்ற காலநிலை காரணமாக அரச முகாமைத்துவ உதவி சேவை பரீட்சை பிற்போடல்

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27 ஆம் மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவி சேவையின் 3 ஆம் தரத்துக்கான ஆட்சேர்ப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறந்த போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

பிற்போடப்பட்ட குறித்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

සංචාරකයින්ගේ පැමිණීමේ වර්ධනයක්

சில உணவுகளை சாப்பிட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படும்

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றம்