உள்நாடு

ரயிலில் தொங்கியப்படி செல்ஃபி – தவறி விழுந்த வெளிநாட்டுப் பெண் பலி

ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

பதுளை பிங்கயட்ட, அமுனுவெல்பிட்டிய வீதிக்கு அருகில் இன்று (19) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் இருந்தே வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார்.

விபத்தில் இறந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் என தெரியவந்துள்ளது.

இறந்தவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் இன்று காலை குழுவுடன் பதுளைக்கு வந்து, பதுளையில் உள்ள எல்ல பகுதிக்கு பயணித்துக்கொண்டிருந்த போது ரயிலில் தொங்கியப்படி செல்ஃபி எடுக்க முயன்றார்.

அந்த நேரத்தில் தண்டவாளத்தின் ஓரத்தில் இருந்த மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இன்று இரவு 10.00 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

editor

NMRA விவகாரம் : சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

PHI அதிகாரிகள் – பிரதமர் இடையே இன்று பேச்சுவார்த்தை