உள்நாடுபிராந்தியம்

பஸ் – வேன் மோதி கோர விபத்து – பலர் காயம்

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் வெவேதென்ன பிரதேசத்தில் தனியார் பஸ்ஸொன்று ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி சென்ற வேனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (17) காலை 06.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஏழு பேர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கைத்துப்பாக்கி திடீரென வெடித்ததில் பொலிஸ் அதிகாரி காயம்

editor

இலங்கையின் சட்டவரைபுகள் குறித்து ஐ.நா – கவலை.

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு