உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டு யுவதியுடன் காதல் – உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

காதல் தொடர்பில் இருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் கட்டளைக்கமைய குறித்த சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன், மூச்சுக் குழாய் இறுகி மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்தவர் தொலைபேசி ஊடாக வெளிநாடு ஒன்றிலுள்ள யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில், இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை வேளையில் உயிரிழந்த இளைஞனின் தாய் தனது உறவினர் வீட்டுக்கு சென்று வந்த நிலையில், இவ்வாறு அவர் தூக்கில் தொங்கி காணப்பட்டதாக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு

editor

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள மற்றுமொரு ஆராய்ச்சி கப்பல்!

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கை விஜயம்

editor