அரசியல்உள்நாடு

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வரவு செலவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (14) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.இளங்குமரன், எஸ்.ஶ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Related posts

ரவி கருணாநாயக்கவை கைது செய்யுமாறு உத்தரவு

இளைஞர் யுவதிகளுக்கு இலத்திரனியல் அடையாள அட்டை

கொரோனா : பலி எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு