உள்நாடுசூடான செய்திகள் 1

டான் பிரியசாத் பிணையில் விடுதலை

தனிப்பட்ட தகராறு தொடர்பான அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிங்கள சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டான் பிரியசாத் இன்று (13) சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர், வெல்லம்பிட்டிய பொலிஸார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெக்குணவல, சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக பொது ஒழுங்கை மீறியதாக வெல்லம்பிட்டி பொலிஸார் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர.

சந்தேக நபரான டான் பிரியசாத், நேற்று முன்தினம் (11) காலை துபாயில் இருந்து நாடு திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், மற்றொரு வழக்கு தொடர்பாக கல்கமுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Related posts

போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது

2026 முதல் பாடசாலை கல்வி தவணைகள் முறையாக நடைபெறும் – பிரதமர் ஹரினி அமரசூரிய

editor

eye-one சிறப்பு புகைப்படத்தை இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கிய சஜித்

editor