உள்நாடுபிராந்தியம்

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – காலி வீதியின் குமாரகந்த சந்தியில், கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன விபத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளதோடு, மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மரத்தில் மோதி விபத்தில் சிக்கிய வேன் – 11 பேர் காயம்

editor

இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

திருமணப்பதிவுக்கான கட்டணத்தில் அதிகரிப்பு