உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலைத்தளங்களில் மத்திய வங்கியில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலி விளம்பரங்களின் பரவல் சமீபத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி மூன்றாம் தரப்பு சமூக ஊடகங்கள் மூலம் வேலை வெற்றிடங்களை விளம்பரப்படுத்துவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, அனைத்து வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் “வேலைகள்” என்பதன் கீழ் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக வலைத்தளங்களில் மாத்திரமே வெளியிடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல்!

editor

மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம் – ஜனாதிபதி அநுர

editor