உள்நாடு

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதியன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

எனது உள்ளம் தூமையாது உலமாக்கள் முன் நிலையில் ரிஷாட் பதியுதீன்

editor