அரசியல்உள்நாடு

சுஜீவ எம்.பிக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

கல்கிஸ்ஸை மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தின் போது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை அவமதித்த சம்பவம் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜோன்ஸ்டனுக்கு சரணடைய கால அவகாசம்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு

தரம் 06 சேர்ப்பதிற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள்