உள்நாடு

வெகுவாக குறைந்த முட்டை, கோழி இறைச்சியின் விலைகள்

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலை வெகுவாக குறைந்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 26 ரூபா தொடக்கம் 30 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சி 650 ரூபாவிலிருந்து 850 ரூபாவாகவும் காணப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவினால் விலை குறைவடைந்துள்ளதாகவும் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 500 முதல் 520 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, கோழி இறைச்சியின் மொத்த விலை ஒரு கிலோ 600 ரூபா எனவும் குறிப்பிடுகின்றனர்.

Related posts

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தீர்மானமில்லை

ரஷ்யாவில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போர் -புட்டின் அறிவிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் – துப்பாக்கி இயங்காததால் உயிர் பிழைத்த நபர் – நீர்க்கொழும்பில் சம்பவம்

editor