உள்நாடு

திடீர் சுகயீனம் காரணமாக வெளிநாட்டுப் பெண் மரணம்

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தார்.

மேற்படி விடுதியில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 24 வயதுடைய இங்கிலாந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் ஜேர்மன் தம்பதியினராவர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ஊரடங்குச் சட்டம் நீக்குவது தொடர்பான தீர்மானம் இன்று

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

சனத் நிஷாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பெப்ரவரி 2 ஆம் திகதி!