அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை யோட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

புதிய அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் வர்த்தமானி வெளியானது

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு